×

திண்டுக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலையில் 7 பேர் கைது-ஆயுதங்கள் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள பெரிய கோட்டையை சேர்ந்தவர் கோபால்சாமி(29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ம.மு.கோவிலூர் பிரிவு அருகே காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபால்சாமி அவரது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முள்ளிப்பாடியை சேர்ந்த யோகேஷ், வடமதுரையை சேர்ந்த லட்சுமணன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி.சீனிவாசன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி, மாரிமுத்து, ஜெய்கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஏர்போர்ட் நகர் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.பின்னர் அங்கு பதுங்கியிருந்த முள்ளிப்பாடியை சேர்ந்த யோகேஷ்(27), முத்துக்குமார்(20), ராமர்(21), கோபிநாத்(20) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலை வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றின் அருகே பதுங்கியிருந்த வடமதுரையை சேர்ந்த லட்சுமணன்(19), சீலப்பாடியைச் சேர்ந்த ராஜா(22), முள்ளிப்பாடியை சேர்ந்த விஜய்(19) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 3 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி சீனிவாசன் பாராட்டினார்….

The post திண்டுக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலையில் 7 பேர் கைது-ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Gopalsamy ,Periya Fort ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...