×

ஓடிடியில் ஆக.11ல் வெளியாகிறது மாவீரன் படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம், ஆகஸ்ட் 11ம் தேதி Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அஸ்வினின் சாந்தி டாக்கிஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின் சரிதா, யோகி பாபு, மதன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாவீரன். கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் மழையிலும் நனைந்து வருகிறது, மாவீரன் திரைப்படம்.

தற்போது வரை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது மாவீரன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காதிருக்கின்றனர். அதன்படி இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மாவீரன் திரைப்படம் வெளியிடப்படுகிறது. மேலும் இது குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை ஓடிடி தளத்தில் இந்த படத்தை காண ஆவலுடன் உள்ளனர்.

The post ஓடிடியில் ஆக.11ல் வெளியாகிறது மாவீரன் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sivakarthykeyan's' ,Amazon ,Shivakarthigayan ,Adhiti Sankar ,Mishkin Sarita ,Yogi Babu ,Madan ,Madoon Ashwin ,Shanti Takis ,Ashwin ,OTD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...