×
Saravana Stores

சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி கண்டுப்பிடிப்பு: 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை

சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது உள்ளிட்டோரை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. ஜாகிர் உசேன், சுரேஷ்குமார், கணேஷ் நடராஜன், மணிமொழி உள்ளிட்டோரையும் கைது செய்து அமலாக்கப்பரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.100 கோடியை சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்தது. சென்னை துறைமுகம் வைப்பு நிதியாக செலுத்திய ரூ.100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உட்பட 18 பேரை கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ கைது செய்துள்ளது. மோசடி செய்யப்பட்ட ரூ.100 கோடியில் ரூ.55 கோடி அளவுக்கு பணம் கைப்பற்றப்பட்டு விட்டது. தற்போது அமலாக்கப்பரிவும் சென்னை துறைமுக நிதி மோசடி செய்யபட்டது குறித்து விசாரணை நடத்துகிறது. அமலாக்கப்பரிவால் கைதான சுடலைமுத்து, மோசடிப் பணத்தில் 234 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சுடலைமுத்து தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நெல்லை மாவட்டத்தில் 234 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. சுடலைமுத்து மகன் குருநாதனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சரணடைந்தார்….

The post சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி கண்டுப்பிடிப்பு: 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai Ports Responsiveness Corporation ,Chennai ,Chennai Ports Responsiveness Corporation funds ,GP ,Enforcement Department ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது