×

மனைவியுடன் விஷ்ணு விஷால் கொண்டாட்டம்

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம், ‘லால் சலாம்’. இது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. இதில், மொய்தீன் பாய் என்ற சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் விக்ராந்த், விஷ்ணு விஷால், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் 2ம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், இப்படத்தில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று சொல்லி, தனது மனைவி ஜூவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் கேக் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பாக எடுத்த சில போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

The post மனைவியுடன் விஷ்ணு விஷால் கொண்டாட்டம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishnu ,Chennai ,Aiswarya Rajinikanth ,Rajinikanth ,Moitene Bai ,Vikranth ,Vishnu Vishal ,Kabildev ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹீரோவாகும் விஷ்ணு விஷாலின் தம்பி