×

சந்திரமுகியாக மாறிய கங்கனா ரனவத்

சென்னை:‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனாவின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பாகத்தில் ஜோதிகா ஏற்று நடித்த ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார். பி.வாசு இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ தயாராகியுள்ளது.

இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு உள்பட பலர் நடிக்கின்றனர்.லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் கங்கனாவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

The post சந்திரமுகியாக மாறிய கங்கனா ரனவத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gangana Ranawath ,Chandramukkana ,Gangana ,Chandramukhi ,Jodika Adu ,Rajinikanth ,Jodika ,Nayantara ,Prabhu ,Kangana Ranavat ,Chandramukudhi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விவசாயிகள் போராட்டம் குறித்து...