×

சாரல்மழை,பனிமூட்டம் கோத்தகிரியில் குளுகுளு காலநிலை

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு லேசான சாரல் மழை, பனி மூட்டத்துடன் குளு,குளு காலநிலை நிலவி வருகிறது.கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லேசான குளிரும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் வறண்ட வானிலை காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் சிறிது நேரம் வெயில் அடித்த நிலையில் மதியம் முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு நகர்புறங்களில் மேகம் சூழ்ந்து காணப்பட்டது.கடந்த சில நாட்களாக வெயிலா சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென மழைப் பெய்ததால் காலநிலை‌ மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.பகல் நேரங்களில் சாலைகளில் மேகம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தில் முகப்பு விளக்கு எரிந்தபடி செல்லும் சூழல் உருவானது….

The post சாரல்மழை,பனிமூட்டம் கோத்தகிரியில் குளுகுளு காலநிலை appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Glu ,Dinakaran ,
× RELATED நீலகிரி கோத்தகிரியில் சாலையோர முட்புதர் அகற்ற கோரிக்கை