×

2022ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை கிரிஜா குமார்பாபுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி,  2022-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை திருமதி கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில் “அவ்வையார் விருது” தமிழ்நாடு அரசால்  வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருது மகளிர் அதிகாரம், மதநல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றியவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி 8 கிராம் தங்கப்பதக்கமும், ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், சால்வை மற்றும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்படுகிறது.    அவ்வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான “அவ்வையார் விருது” திருமதி. கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.  அவர் இந்திய குழந்தைகள் நலச்சங்கம், இளைஞர் நீதிக் குழுமம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குழு மற்றும் மருத்துவ நெறிமுறை ஆலோசனைக்குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராக பணியாற்றி  செய்த சேவைகளுக்கும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து  ஆற்றிய பணிகளுக்கும், பயிற்சியாளராக பல சமூக பணியாளர்களை உருவாக்கிய பெருமையையும் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.    இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., சமூகநல இயக்குநர் திருமதி டி. ரத்னா, இ.ஆ.ப., ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் திருமதி வே. அமுதவல்லி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post 2022ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை கிரிஜா குமார்பாபுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. ,Kirija Kumarbhab ,G.K. ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Sh.R. b.k. ,G.K. Stalin ,Leadership Secretariat, Social Welfare ,Krija Kumarbhab ,
× RELATED தெலங்கானா துணை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்