×

பணகுடி பெட்ரோல் பங்க்கில் பயங்கரம்; தொழிலாளி அடித்துக்கொலை: தந்தை, மகன் உள்பட 5 பேர் கும்பல் வெறிச்செயல்

பணகுடி: பணகுடியில் பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட தகராறில் சமாதானம் பேச முயன்ற தொழிலாளி, தந்தை-மகன் உள்ளிட்ட 5 பேர் கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். லாரி டிரைவரான இவர் நேற்றிரவு பெட்ரோல் போடுவதற்காக அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் நின்று ெகாண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பல்க்கில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட கலைச்செல்வன், கும்பலிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கலைச்செல்வனை சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த கலைச்செல்வனை, பெட்ரோல் பங்க் ஊழியர்கள்  மீட்டு  நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து  பணகுடி பகுதியை சேர்ந்த ஆட்டோ குமார், பாலசுப்பிரமணியன், சிவா ஆகிய 3 பேரை கைது செய்தனர். பாலசுப்பிரமணியன் மகன் மாணிக்ராஜா  உள்பட மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் நடந்த தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post பணகுடி பெட்ரோல் பங்க்கில் பயங்கரம்; தொழிலாளி அடித்துக்கொலை: தந்தை, மகன் உள்பட 5 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Bhagudi Petrol Bank ,Petrol Bank ,Bankle Petrol Bank ,Dinakaran ,
× RELATED சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு...