×

சிபிஐ என கூறி அரசு மருத்துவரிடம் ரூ.36 லட்சம் மோசடி

சேலம்: சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் 49 வயதுடைய அரசு மருத்துவர். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 10ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் சிபிஐயில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய சிம் கார்டு வாங்கி உள்ளதாகவும், அந்த சிம்கார்டு எண்ணை வைத்து ஆள்கடத்தல், பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மர்மநபர், ஆதார், தங்களது வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும் எனவும் அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

அதன்படி மருத்துவரும் அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர் கொடுத்த 3 வங்கி கணக்குகளுக்கு மருத்துவர் 10 முறை மொத்தம் ரூ.36 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மீண்டும் அந்த நபரை மருத்துவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் இதுபற்றி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிபிஐ என கூறி அரசு மருத்துவரிடம் ரூ.36 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : CBI ,Salem ,Karungalpatti ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...