×

உலகளவில் கொரோனா பாதிப்பு பலி 60 லட்சத்தை எட்டியது: 3வது இடத்தில் இந்தியா

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டி உள்ளது. அமெரிக்கா 9.58 லட்சம் பலியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரையிலும் உலகையே ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் 3 அலைகளாக கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பு மற்றும் உயிர் பலியை ஏற்படுத்தியது. ஒமிக்ரான் எனும் புதிய வரை மாறுபாடால் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு குறைந்தாலும், போலந்து, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இறப்புகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இந்நிலையில், 3வது ஆண்டாக ஓயாமல் பரவி வரும் கொரோனா வைரசால், உலக அளவில் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை நேற்று 60 லட்சத்தை எட்டியது. உலகம் முழுவதும் மொத்தம் 44.53 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 9 லட்சத்து 58 ஆயிரத்து 438 பேர் இறந்துள்ளனர். 6 லட்சத்து 52 ஆயிரத்து 216 பேருடன் பிரேசில் பலி எண்ணிக்கையில் 2வது இடத்திலும், 5 லட்சத்து 15 ஆயிரத்து 36 பேருடன் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது….

The post உலகளவில் கொரோனா பாதிப்பு பலி 60 லட்சத்தை எட்டியது: 3வது இடத்தில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Washington ,America ,Dinakaran ,
× RELATED பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…