×

ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறேனா? பிரபாஸ் அதிர்ச்சி

சென்னை: பிரபாஸ்,  பூஜா ஹெக்டே, சத்யராஜ் நடித்த ராதே ஷ்யாம் என்ற பான்-இந்தியா படம், வரும் 11ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த மேக்கிங் வீடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபாஸ் பேசியதாவது: காதலை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் இப்படத்தில் கைரேகை நிபுணராக நடித்துள்ளேன். என் திருமணத்துக்கு இன்னும் நேரம் வரவில்லை. நான் எதிர்பார்க்கும் பெண்ணை இன்னும் சந்திக்கவில்லை. அவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்துள்ளேன். அதுபோல் ஒருவரை சந்தித்த பிறகு முடிவு செய்வேன். நானும், டைரக்டர் ராஜமவுலியும் நெருங்கிய நண்பர்கள். எங்கள் படங்களைப் பற்றி அடிக்கடி விவாதிப்போம். கண்டிப்பாக அவர் பாகுபலி 3ம் பாகம் உருவாக்குவார். அதில் நான் நடிப்பேனா என்று அவர்தான் சொல்ல வேண்டும். நான் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக எழுதுகிறார்கள். அது உண்மை இல்லை. ஏற்கனவே தெலுங்கில் பல தமிழ் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருப்பதால், இப்போது தமிழ் ஹீரோக்கள் சிலர் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இப்போது பான்-இந்தியா படங்கள் ஏராளமாக உருவாகிறது. எல்லா மொழி நடிகர்களையும் எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்திருப்பதால், சினிமாவுக்கு உலக அளவில் மார்க்கெட் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் சினிமாவில் எப்போதோ வந்திருக்க வேண்டும். மணிரத்னம் எனது பேவரைட் டைரக்டர். அவரது டைரக்‌ஷனில் நடிக்கவும், நேரடி தமிழ் படத்தில் நடிக்கவும் நான் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரபாஸ் பேசினார்….

The post ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறேனா? பிரபாஸ் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Prabhas ,Chennai ,Pooja Hegde ,Sathyaraj ,
× RELATED நான் திருமணம் செய்தால் அவங்க மனம் புண்படும்: பிரபாஸ் பளிச்