×

ரூ500 கோடி வசூலிக்கும் படம் கூட வேண்டாம்: மாளவிகாமோகனன் தடாலடி

சென்னை: ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் ஜோடியாக மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு வந்த பல வாய்ப்புகளை நிராகரித்ததாக சொல்கிறார் மாளவிகா மோகனன். இது பற்றி அவர் கூறியது: படத்தில் நடிப்பது பணத்துக்காக கிடையாது. அது என்னிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. எனக்கு பணத்தாசை கிடையாது. அதனால் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.

ஒரு மெகா பட்ஜெட் படத்தில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால்கூட அதில் எனது கேரக்டரைத்தான் முதலில் பார்ப்பேன். என் கேரக்டர் படத்தில் சரியாக இல்லாவிட்டால் அதில் நடிக்க மாட்டேன். ரூ500 கோடி வசூலிக்கும் அளவிலான படமாக இருந்தாலும் சரிதான். காரணம், எனக்கான கேரக்டர் படத்தில் வலுவாக இல்லாவிட்டால், மக்களிடம் நான் பதிவாக மாட்டேன். அதே சமயம், சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில் பலமான கேரக்டர் எனக்கு தந்தால் அதில் நடிக்கவே முதலில் ஆர்வம் காட்டுவேன்.

The post ரூ500 கோடி வசூலிக்கும் படம் கூட வேண்டாம்: மாளவிகாமோகனன் தடாலடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malavikamohanan ,Chennai ,Malavika Mohanan ,Vikram ,Thangalan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...