×

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிப்ரவரி 22ம் தேதி முதல் 17,400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு; சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்

டெல்லி: ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் இருந்து 7 சிறப்பு விமானங்களில் 1,314 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், பிப்ரவரி 22ம் தேதி முதல் சிறப்பு விமானங்களில் 17,400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்; ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் இருந்து 7 சிறப்பு விமானங்களில் 1,314 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், பிப்ரவரி 22ம் தேதி முதல் சிறப்பு விமானங்களில் 17,400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். 73 சிறப்பு விமானங்களில் 15,206 பேர் தாயகம் திரும்பியுள்ளனர், இந்திய விமானப்படை விமானம் C17 விமானம் 201 இந்தியர்களுடன் இன்று மாலை தரையிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை விமானம் 10 முறை பறந்து 2,056 பேர் மீட்கப்பட்டுள்ளார். இன்று வந்த 7 சிறப்பு விமானங்களில் 4 விமானங்கள் புதுடெல்லியிலும், 2 விமானங்கள் மும்பையிலும், ஒரு விமானம் மாலை தரையிறங்கும். நாளை, சுசேவாவிலிருந்து 2 சிறப்பு சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்றும் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் திரும்ப உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது….

The post ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிப்ரவரி 22ம் தேதி முதல் 17,400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு; சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indians ,Operation Ganga ,Ministry of Civil Aviation ,Delhi ,Ukraine ,Ministry of Civil Aviation Information ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...