×

ஜப்பான் படப்பிடிப்பை முடித்தார் கார்த்தி

 

சென்னை: ராஜுமுருகன் இயக்கும் ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. படத்தின் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் ஒரு பாடலைப் படமாக்க சென்னை அருகே உள்ள பிலிம்சிட்டியில் செட் அமைக்கப்படுகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. 3 மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.இதன் பின்னர் ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் வேடம் ஏற்கிறார். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பி.சி ராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

The post ஜப்பான் படப்பிடிப்பை முடித்தார் கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi ,Japan ,Chennai ,Rajumurugan ,Anu Emmanuel ,Vijay Milton ,Sunil ,G.V. ,Prakash Kumar ,Diwali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘கார்த்தி சிதம்பரம் எம்பியை கண்டா...