×

குற்றம்சாட்டும் கங்கனா

எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர், கங்கனா ரனவத். தற்போது அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு முக்கியமானது. அதாவது, சில நடிகர்கள் தங்களது பேக் ஐடிகளின் மூலம் தன்னைத் தொடர்புகொண்டு, தன்னுடன் டேட்டிங் செய்ய அலைகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘திரைப்பட மாஃபியாக்கள் எப்போதும் தங்கள் இயல்பான வேலையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஏற்கனவே நான் டேட்டிங் செய்த ஒரு பிரபல பாலிவுட் நடிகர், போலியான சமூக வலைத்தள கணக்குகளைப் பயன்படுத்தி, என்னிடம் சாட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஒருமுறை அவர் எனது சமூக வலைத்தளத்தை ஹேக் செய்து முடக்கிவிட்டு என்னை மிரட்டினார். அதுபோல், ரசிகைகளை அதிகமாக வைத்திருக்கும் மற்றொரு பாலிவுட் நடிகர், என் வீட்டுக்கு வந்து தன்னை டேட்டிங் செய்யும்படி கெஞ்சினார். பல்வேறு இடங்களுக்கு அவர் என்னை ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்தார். ஆனால், அவரை நான் புறக்கணித்து விட்டேன். அதர்மத்தை அழிப்பதே தர்மத்தின் முக்கியமான நோக்கம் என்பதால், அவர்களை அழிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த நடிகர்கள் யார் என்பது சஸ்பென்ஸ்.

The post குற்றம்சாட்டும் கங்கனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : kangana ,Gangana Ranawat ,Gangana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...