×

அஜித்தின் விடா முயற்சியில் திரிஷா அவுட் தமன்னா இன்

சென்னை: அஜித்தின் ‘விடா முயற்சி’ படத்தில் திரிஷாவை தேர்வு செய்யும் முடிவை கைவிட்டு, தமன்னாவை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். அஜித் நடிக்கும் ‘விடா முயற்சி’ படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இம்மாதம் 15ம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக தனது வெளிநாடு பைக் பயணத்தை முடித்துவிட்டு அஜித் சென்னை திரும்பிவிட்டார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் திரிஷாவுடன் நடந்து வந்தது.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிப்பாடிய ‘காவாலா’ பாடல் வெளியாகி, உலக அளவில் இந்த பாடல் பிரபலமாகியுள்ளது. இதில் தமன்னாவின் நடனமும் ரசிகர்களால் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த ஒரே பாடல் மூலம் தமன்னா ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். இதனால் இதில் திரிஷாவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு விரும்புகிறதாம். இதற்கு முன் ‘வீரம்’ படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ‘விடா முயற்சி’யில் நடிக்க கால்ஷீட் ஒதுக்குவார் என கூறப்படுகிறது.

The post அஜித்தின் விடா முயற்சியில் திரிஷா அவுட் தமன்னா இன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Tamannaah ,Ajith ,CHENNAI ,Mizhil Thirumeni ,Leica ,Anirudh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...