×

சந்திரமுகி 2 படத்தில் ‘வேட்டையன்’ தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2005ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘சந்திரமுகி’. 800 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்த படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’, சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகி முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் பார்வையுடன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது.

முதல் பார்வை போஸ்டரில் ‘வேட்டையன்’ தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்கள். கங்கனா ரணவத், ராதிகா, வடிவேலு, சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு ‘பாகுபலி, ஆர்ஆர்ஆர்’ படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து ராகவா லாரன்ஸ், “தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி. ‘வேட்டையன்’ மதல் பார்வையை உங்களுக்காக வெளியிடுகிறோம், உங்களது ஆசீர்வாதம் தேவை,” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

The post சந்திரமுகி 2 படத்தில் ‘வேட்டையன்’ தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Raghava Lawrence ,P.Vasu ,Rajinikanth ,Jyothika ,Nayanthara ,Prabhu ,Vadivelu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...