×

குற்றப்பரம்பரை வெப்சீரிஸ் இயக்குகிறார் சசிகுமார்

சென்னை: அயோத்தி படம் மூலம் மீண்டும் பிரபலமாகிவிட்ட சசிகுமார், இப்போது டைரக்‌ஷன் பக்கம் திரும்ப உள்ளார். நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி எழுதிய நாவல் குற்றப்பரம்பரை. இந்த நாவலை படமாக்க இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா இடையே போட்டி நிலவியது. இந்நிலையில் இருவரும் அந்த திட்டத்தை கைவிட்டதால், இப்போது சசிகுமார் இதை இயக்க உள்ளார். வெப்சீரிஸாக இந்த நாவல் உருவாக உள்ளது.

இதில் திரைக்கதை, இயக்கம் பொறுப்பை சசிகுமார் ஏற்றுள்ளார். இந்த வெப்சீரிஸில் அவர் நடிக்கவில்லை. ‘குற்றப்பரம்பரை கதையின் சாராம்சம் சிறிதும் குறையாத வகையில் இதற்கான திரைக்கதை பணிகள் முடிவடைய உள்ளன. வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறோம். இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post குற்றப்பரம்பரை வெப்சீரிஸ் இயக்குகிறார் சசிகுமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sasikumar ,Chennai ,Ayodhya ,Vela Ramamurthy ,Bharathiraja ,Bala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அயோத்தி கோயிலுக்கு 800 பக்தர்கள் பயணம்