×

ரஷிய பூனைக் குட்டிகளை இறக்குமதி செய்ய தடை.. ரஷியா, பெலாரசில் உலக வங்கியின் திட்டங்களும் நிறுத்தம்!!

மாஸ்கோ : ரஷியா மீது மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளின் உச்சபட்சமாக பூனைக் குட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதித்து பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் ஒவ்வொன்றாக தன்வசம்படுத்த தொடங்கிவிட்டன.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்ய பூனை வளர்ப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பூனைகளுக்கான சர்வதேச கண்காட்சிகளில் ரஷிய பூனைகளை அனுமதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச்1ம் தேதியில் இருந்து மே மாதம் 31ம் தேதி வரை ரஷிய பூனைகளுக்கான இறக்குமதி தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகள் உடனான அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷியா மற்றும் பெலாரஸ் உடனான அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாகவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. …

The post ரஷிய பூனைக் குட்டிகளை இறக்குமதி செய்ய தடை.. ரஷியா, பெலாரசில் உலக வங்கியின் திட்டங்களும் நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : World Bank ,Russia ,Belarus ,Moscow ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியம் விற்ற...