- ஏஆர்க் சரவணன்
- ஆதி
- நிக்கி கல்ரானி
- முனீஸ்காந்த்
- மைம் கோபி
- ஆனந்த் ராஜ்
- அச்சுத் திரைப்படம்
- திபு நினான் தாமஸ்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், மைம் கோபி, ஆனந்த் ராஜ் நடித்து, கடந்த 2017ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘மரகத நாணயம்’. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்து திபு நிணன் தாமஸ் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து சமீபத்தில் ஏஆர்கே சரவனன் இயக்கத்தில் வெளிவந்த வீரன் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் ஏஆர்கே சரவன் டுவிட்டர் பக்கத்தில் ‘2 லோடிங்…’ என குறிப்பிட்டு மரகதநாணயம் படத்தின் லோகோவான அந்த பச்சை மரகத கல்லை பதிவிட்டு, ‘மரகத நாணயம் 2’ விரைவில் என மறைமுகமாக பகிர்ந்துள்ளார். இந்த படத்தையும் ஆக்சிஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
The post மரகதநாணயம் 2ம் பாகம் தயாராகிறது: இயக்குனர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.