×

நதியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: இவானா பேச்சு

ரமேஷ் தமிழ்மணி இசை மற்றும் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய் நடித்துள்ள படம், ‘எல்ஜிஎம்’. கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி தயாரித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ‘நாச்சியார்’, ‘லவ் டுடே’ இவானா, ‘டிரைலரில் நான் பேசும் ‘எனக்கு ஒரு ஐடியா’ என்ற டயலாக் பிரபலமாகி இருக்கிறது. இந்த ஐடியாவை வழங்கியவர், சாக்‌ஷி தோனி.

நதியாவிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்பு எப்படி தயாராவது, அந்த மனநிலைக்கு எப்படி மாறுவது என்பதை ஹரீஷ் கல்யாணிடம் தெரிந்துகொண்டேன். ‘லவ் டுடே’ ஹிட்டுக்குப் பிறகு ‘எல்ஜிஎம்’ பெரிய ஹிட்டாக வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்றார். சாக்‌ஷி தோனி எழுதிய ‘எல்ஜிஎம்’ கதை ஹிட்டானால், தொடர்ந்து இதுபோல் பல கதைகள் எழுதி படங்கள் தயாரிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறாராம்.

The post நதியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: இவானா பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nadia ,Ivana ,Harish Kalyan ,Yogi Babu ,RJ Vijay ,Ramesh Tamilmani ,Dhoni ,Sakshi ,Vishwajith ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேக்கப் இல்லாமல் நடித்த இவானா