×

எடிட்டர் விட்டல் மரணம்

சென்னை: சினிமா எடிட்டர் ஆர்.விட்டல் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 90. ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான எடிட்டராக இருந்தவர் விட்டல். மேலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றினார். ஆடு புலி ஆட்டம், படிக்காதவன், ஜப்பானில் கல்யாண ராமன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், நான் மகான் அல்ல, பாயும் புலி, சர்வர் சுந்தரம், விக்ரம், ராஜா சின்ன ரோஜா உள்பட நூற்றுக்கும் ேமற்பட்ட படங்களுக்கு விட்டல் எடிட்டிங் செய்துள்ளார்.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் பணியாற்றியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விட்டல், சில மாதமாக உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post எடிட்டர் விட்டல் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vital ,R. Vital ,Vittal ,AVM ,Atom ,Kalyana Raman ,Japan ,Ruratukkale ,Editor ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மீன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேவை...