×

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது: வேளாங்கண்ணி பேராலயத்தில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர ஏராளமான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை

நாகை: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர ஏராளமான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான  சாம்பல் புதன் துவங்கியது. இதையொட்டி நாகை மாவட்டம்   வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது. பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். சிறப்பு திருப்பலியில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது….

The post கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது: வேளாங்கண்ணி பேராலயத்தில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர ஏராளமான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Lent ,Ukraine-Russia war ,Velankanni Cathedral ,Nagai ,Christian ,Ash Wednesday ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி