×

சதீஷ் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் குப்தா

லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் படம், ‘வித்தைக்காரன்’. இதில் ஹீரோயினாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். இவர் மும்பை மாடல் அழகி. இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் முன்னணியிலுள்ள இவர், தொழில்முறை நடனக்கலைஞராகவும் பணியாற்றுகிறார். தவிர ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் நடிக்கின்றனர்.

இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ என்ற படத்தை தயாரித்த ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். ‘நாய்சேகர்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய காமெடி நடிகர் சதீஷ், மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் படம் இது. மாறுபட்ட தோற்றத்தில் மேஜிக் நிபுணர் வேடத்தில் நடித்துள்ளார். ‘ஏமாற்றுவதை விட, ஏமாறுவதுதான் மிகப்பெரிய தவறு’ என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

The post சதீஷ் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் குப்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simron Gupta ,Satish ,Venky ,Lokesh Kanakaraj ,Simren Gupta ,Mumbai ,Satish Coupler ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது