×

ஏலியன் வேடத்தில் நடிக்கும் டாப்ஸி

பல்வேறு மொழிகளில் நடித்து வரும் டாப்ஸி, தயாரிப்பாளராகவும் மற்றும் மும்பையில் தொழிலதிபராகவும் இருக்கிறார். தற்போது ஷாருக்கானுடன் ‘டன்கி’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தனது அடுத்த தமிழ்ப் படம் குறித்து பேசுகையில், ‘தற்போது நான் ‘ஏலியன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன்.

இதன் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. இப்படம் குறித்து இப்போது எந்தவொரு விஷயத்தையும் வெளியே சொல்ல முடியாது. நான் நடித்த ‘கேம் ஓவர்’ என்ற படத்தை ரசித்த அனைவரும் இப்படத்தையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இதில் நான் ஏலியன் கேரக்டரில் நடிக்கவில்லை. ஆனால், நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் எனக்குப் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது’ என்றார்.

The post ஏலியன் வேடத்தில் நடிக்கும் டாப்ஸி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Taapsee ,Alien ,Mumbai ,Shahrukh Khan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!