×

சரிவை நோக்கி திருமூர்த்தி அணை நீர்மட்டம்

உடுமலை:  திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.மெக்கா தொட்டி என்றழைக்கப்படும் திருமூர்த்தி அணைக்கு வால்பாறை அருகே உள்ள அப்பர் நீராறு உள்ளிட்ட பிஏபி பாசனத் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காண்டூர் கால்வாய் வழியாக 50 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவில் தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.திருமூர்த்தி அணியின் கீழ் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராமங்கள் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதியையும் பெற்று வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் தற்போது 41.53 அடி அளவே நீர்மட்டம் உள்ளது.அணையிலிருந்து பாசனத்திற்காக 1071கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக 764 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இருப்பினும் கோடைகாலம் துவங்கியதால் பிஏபி அணைகளில் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதனால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. பாசனத்திற்கு தொடர்ந்து திறக்கப்படும் தண்ணீர் காரணமாக திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்கள் வரும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளன….

The post சரிவை நோக்கி திருமூர்த்தி அணை நீர்மட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirumurthy dam ,Udumalai ,Tirupur district ,Amaravati Dam ,Coimbatore… ,Thirumurthy Dam ,Dinakaran ,
× RELATED உடுமலை அருகே பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்