×

உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார்: மால்டோவா அதிபர் மைய சண்டு அறிவிப்பு

லண்டன்: உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. ரஷ்யாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தனியாக செல்ல இயலாதவர்கள் ரயில்களை பயன்படுத்த கூறப்பட்டு உள்ளது. அவர்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்து உள்ளனர்.உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா குண்டு வீசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், உக்ரைன் மக்கள் பீதியடைந்து உள்ளனர். பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று  மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையோர மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது….

The post உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார்: மால்டோவா அதிபர் மைய சண்டு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,President Central Sandu ,LONDON ,Russian Federation ,Luhansk ,Sumy ,Dinakaran ,
× RELATED ரஷ்யா- உக்ரைன் டிரோன் யுத்தம்: 90 டிரோன்கள் அழிப்பு