×

‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 188 அவசரகால ஊர்தியின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விபத்தில் சிக்கிவோருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பது முதல், மருத்துவ சிகிச்சைகளை முறையாக பொதுமக்களுக்கு வழங்க ஆம்புலன்சின் தேவை என்பது அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில், ஒரு விபத்து ஏற்படக்கூடிய இடத்தில் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக உயிர்காக்கும் வகையில் ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் மூலமாக உயிர்காக்கும் உபகரணங்களுடன் கூடிய 188 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார். ஒரு செவிலியர், உதவியாளர், ஓட்டுனரை உள்ளடக்கி இந்த 108 ஆம்புலன்ஸ்கள் செயல்படும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை என்பது 1491-ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டிக்கு மருந்து பெட்டகம் வழங்கி முதலமைச்சர் நலம் விசாரித்தார். தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 50 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். …

The post ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : service ,G.K. Stalin ,Chennai ,Chief of the Chief of Emergency Varthi ,188 Emergency Varthi ,188 Ambulance Service ,Dinakaran ,
× RELATED மக்கள் திரள் பேட்டியாளர், சமூக இயல்...