×

கிராமக்கோயில் பூசாரி நலவாரியம் நலதிட்ட உதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: கிராமக்கோயில் பூசாரி நலவாரியம் நலதிட்ட உதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் நலதிட்ட உதவி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் பணியாற்றும் நலவாரிய உறுப்பினர் மரணமடைந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.2000/- லிருந்து ரூ.5000/- மாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.15000/- லிருந்து ரூ.50,000/- என உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் நலதிட்ட உதவி உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலதிட்ட உதவிகளான  மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/-, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கற்பதற்காக ரூ.1000/- முதல் ரூ.6000/-வரை, பூசாரியின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு ரூ.3000/- முதல் ரூ.5000/- வரை, பூசாரியின் மனைவி அல்லது மகளின் மகப்பேறு தொடர்பான உதவிகளுக்கு ரூ.6000/-, உறுப்பினர் மரணமடைந்தால் அவரது இறுதி சடங்கிற்கு ரூ.2000/-, உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு ரூ. 15000/- ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா நோய் தொற்று காலத்தில் கிராமக்கோயில் பூசாரி நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000/- கொரோனா நிவாரணநிதி வழங்கப்பட்டது. இத்துறை இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கைக்கான விபரங்கள் பதிவேற்றம் செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டு 1034 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 34661 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள் 25 வயது நிரம்பியிருக்க வேண்டும். 60 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிபுரியும் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்க வேண்டும். திருக்கோயில் கட்டி 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். திருக்கோயிலில் பூசாரியாக தொடர்ந்து 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் அனைவரும் வழிபடும் பொது திருக்கோயிலாக இருத்தல் வேண்டும். கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்ப படிவங்கள் துறை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து அந்ததந்த மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில்  பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து நலதிட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். …

The post கிராமக்கோயில் பூசாரி நலவாரியம் நலதிட்ட உதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Priest Welfare Board ,Gramakkoil Welfare ,Chennai ,Gramakkoil ,Chief Minister of ,Tamil Nadu ,Sh.R. b.k. G.K. ,Stalin ,Gramakoil Priest Welfare Board Welfare ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்