×

கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை சென்னையில் 25ம் தேதி மாநில வர்த்தகர் அணி கூட்டம்

சென்னை: திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் கூட்டம் 25ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் வர்த்தகர் அணி தலைவர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, இணை செயலாளர்கள் ம.கிரகாம்பெல், வி.யென், அ.வெற்றியழகன் எம்எல்ஏ, துணை செயலாளர்கள் பி.டி.பாண்டிச்செல்வம், டி.ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.அசோக்பாண்டியன், சிவகாசி த.வனராஜ், வி.பி.மணி, ராமநாதபுரம் இ.ராமர், மதுரை க.தனசெல்வம், வேப்பூர் வி.எஸ்.பெரியசாமி, வி.யுவராஜ், பெ.சுந்தரவரதன், வே.பல்லவிராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், தருமபுரி பி.தர்மசெல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவரின் பிறந்த நாள், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்….

The post கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை சென்னையில் 25ம் தேதி மாநில வர்த்தகர் அணி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Poet Kasimuthu Manickam ,Chennai ,DMK ,DMK Traders ,Dinakaran ,
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...