×

தோனி சொன்ன அட்வைஸ்: ஹரீஷ் கல்யாண்

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, அவருடைய மனைவி சாக்‌ஷி இணைந்து தயாரித்திருக்கும் படம், ‘எல்ஜிஎம்’ என்கிற ‘லெட்ஸ் கெட் மேரீட்’. இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: சாக்‌ஷி தோனி மேடம் எழுதியுள்ள கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களும் தங்களை இணைத்துக்கொள்வார்கள். இந்தக்கதை உலகிலுள்ள பொதுவான பிரச்னையை பற்றி உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறது. ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் நதியாவைப் பார்த்த பிறகு என் அம்மாவிடம் சென்று, ‘நதியா மேடத்தை நான் அம்மா என்று சொல்லலாமா?’ என்று கேட்டேன். அந்தஅளவுக்கு அவரையும், அவரது இயல்பான நடிப்பையும் பிடிக்கும். இப்போது அவருடன் இணைந்து நடித்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

படத்தில் வழக்கமான காமெடி, காதல், சென்டிமெண்ட் காட்சிகளை தாண்டி முக்கிய விஷயம் இடம்பெற்றுள்ளது. உங்கள் குடும்பத்தை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. அது கடவுளாக பார்த்து கொடுக்கும் அன்புப்பரிசு. அப்படி எல்லா குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு விஷயம் இப்படத்தில் இருக்கிறது. இயக்குனரிடம் ஒருநாள் நான், ‘தோனி சார் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கருத்து சொன்னார்’ என்று கேட்டேன். அதற்கு அவர், தோனி கூறிய, ‘நாம் செய்த வேலையை முதலில் நாம் நேசிக்க வேண்டும். நாம் செய்த இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்பதை என்னிடம் தெரிவித்தார். அதைக்கேட்ட பிறகு சந்தோஷமாக இருந்தது. எங்களுக்கு பிடித்த இப்படம், கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

The post தோனி சொன்ன அட்வைஸ்: ஹரீஷ் கல்யாண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhoni ,Harish Kalyan ,CHENNAI ,Sakshi ,Ivana ,Nadia ,Yogi Babu ,RJ Vijay ,Ramesh Tamilmani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...