×

ஜெயங்கொண்டம் அருகே கும்பல் வெறிச்செயல் கத்தியால் குத்தி வக்கீல் படுகொலை: பேரூராட்சி தேர்தல் முன்விரோதம் காரணமா?

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(34). வக்கீலான இவர்,  உடையார்பாளையம் பேரூராட்சி 15வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட  இலக்கியா பிரபுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கு அவரது உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து  கண்டித்துள்ளனர். இதில் அறிவழகனுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில்  வீட்டிலிருந்து வெளியே வந்த அறிவழகனை, அந்த பகுதியில் மறைந்திருந்த 6  பேர் கொண்ட கும்பலில் ஒருவர், கத்தியால் சரமாரி  குத்தினார். அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவரை  காப்பாற்ற முயற்சித்தபோது அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிடுவதாக  மிரட்டிவிட்டு தப்பி சென்றனர். பின்னர் அறிவழகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீசார் வந்து அறிவழகன் உடலை  கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார்  வழக்குப்பதிந்து தேர்தல்  முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது  வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக  செந்தில்(37) என்பவரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில்  அறிவழகனின் உறவினர்கள், கொலையாளிகள் அனைவரையும் கைது  செய்ய வலியுறுத்தி அரியலூர்-ஜெயங்கொண்டம் பைபாஸ் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட எஸ்பி ெபரோஷ்கான்  அப்துல்லா மற்றும் போலீசார் அவர்களிடம், கொலையாளிகளில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர்.  இதையடுத்து அனைவரும் கலைந்து  சென்றனர்….

The post ஜெயங்கொண்டம் அருகே கும்பல் வெறிச்செயல் கத்தியால் குத்தி வக்கீல் படுகொலை: பேரூராட்சி தேர்தல் முன்விரோதம் காரணமா? appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangkondam ,Ariyazhagan ,Udayarpalayam South Street ,Ariyalur district ,Wodiarpalayam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில்...