×

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் சிவராஜ் குமார்

பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தற்போது தமிழில் ரஜனிகாந்த்துடன் ‘ஜெயிலர்’, தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தமிழ் இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இதை சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி சார்பில், சுதீர் சந்திர பாதிரி பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறார். தற்காலிகமாக ‘சிவண்ணா எஸ்சிஎப்சி 01’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேற்று சிவராஜ் குமாரின் பிறந்தநாளையொட்டி, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் பான் இந்தியா படமான இதை கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தை இயக்கியவர். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் இதில், தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

The post கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் சிவராஜ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shivraj Kumar ,Bengaluru ,Rajanikanth ,Miller ,Dhanusha ,adwait ,Sudir Chandra ,Shivaraj Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்