×

மீண்டும் இணைந்த கவின் ராஜ், முகேன்

திரைக்கு வந்த ‘வேலன்’ படத்தில் பணியாற்றிய இயக்குனர் கவின் ராஜ், நடிகர் முகேன் ராவ் மீண்டும் இணையும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. ஜி.மணிக்கண்ணன் தயாரிக்கிறார். ைடட்டில் முடிவாகவில்லை. 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். முக்கிய கேரக்டரில் ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் நடிக்கிறது. சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், வாகமன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

கிரைம் திரில்லர் கதை கொண்ட இதற்கு ‘பார்க்கிங்’ ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ‘டாடா’ ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். மலேசிய திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள பாடகர் முகேன் ராவ், தற்போது தமிழில் ‘வெற்றி’, ‘மதில் மேல் காதல்’, ‘காதல் என்பது சாபமா’, ‘ஜின்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

The post மீண்டும் இணைந்த கவின் ராஜ், முகேன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kavin Raj ,Mugen ,Gavin Raj ,Mukhen Rao ,Chennai ,G. Manikannan ,Idt ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா, முகென் ராவ் நடிக்கும் ‘மை3’ வெப் சீரீஸ்