பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
“மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை ஹன்ஷிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் பணிபுரிந்துள்ளார்.
The post ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா, முகென் ராவ் நடிக்கும் ‘மை3’ வெப் சீரீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.