×

வாக்கு பெட்டியை மாற்றியதாக கூறி அதிமுக, பாஜவினர் அதிகாரிகளிடம் சண்டை: திருமங்கலத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை திருமங்கலம் மண்டலம் 7 மற்றும் 93 வார்டில் உள்ள ஜெயவேல் பள்ளியில், நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள்  சீல் வைத்த வாக்கு பெட்டியை நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி ஏந்திய  போலீசார் பாதுகாப்புடன்  கொண்டு சென்றனர்.இந்நிலையில்,  வாக்கு பெட்டியை எங்களுக்கு தெரியாமல் கொண்டு சென்று வாக்கு பெட்டியை மாற்றி வீட்டீர்களா என அதிமுகவினர் , பாஜவினர் தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு தெரியாமல் வாக்கு பெட்டியை மாற்றி விட்டார்கள் என்று, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். …

The post வாக்கு பெட்டியை மாற்றியதாக கூறி அதிமுக, பாஜவினர் அதிகாரிகளிடம் சண்டை: திருமங்கலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Tirumangalam ,Chennai ,Jayavel School ,Thirumangalam Mandal 7 ,93 Ward ,
× RELATED ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்…...