×

வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்-வனத்துறையினர் நடவடிக்கை

உடுமலை : திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள்  காப்பகத்திற்குட்பட்ட உடுமலை,அமராவதி,கொழுமம் ஆகிய வனச்சரகங்களில்  யானை,புலி,சிறுத்தை, கரடி,காட்டுப்பன்றி,உடும்பு,செந்நாய்கள், மான்கள் என  ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. ஆண்டுதோறும் கோடை காலங்களின் போது இரை  மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்வது வழக்கம். குறிப்பாக யானை  போன்ற மிகப்பெரிய விலங்குகள் உடுமலை மூணார் மலைவழிப்பாதையை கடந்து அமராவதி  அணைக்கு கூட்டம்,கூட்டமாக வந்து தாகம் தணித்து செல்கின்றன. இரவு முழுவதும்  அணைக்குள் இறங்கி யானைக்கூட்டம் தண்ணீர் அருந்தி விட்டு அதிகாலை  நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி விடும். உடுமலைமூணார்  வழித்தடத்தில் அந்நேரத்தில் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்  செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏழுமலையான்  சுற்று,காமனூத்து பள்ளம், சின்னார் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் அளவுக்கு  அதிகமாக தண்ணீர் தேடி இடம் பெயர்கின்றன.இந்நிலையில் உடுமலை,அமராவதி  மற்றும் கொழுமம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் தாகம்  தணிப்பதற்காக மெகா சைஸ் தொட்டிகள் கட்டி வைத்துள்ள வனத்துறையினர், அவற்றில்  தண்ணீர் நிரம்பும் பணியை கோடை காலம் துவங்கியவுடன் செய்ய துவங்குவர்.  இதில் மான்,சிறுத்தை,புலி உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தணிக்கும். தற்போது  வெயில் அதிகரிக்க துவங்கியதால் வனப்பகுதியில் உள்ள நீரோடை,குட்டை,  அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால் வனவிலங்குகள் தாகம் தணிக்க இடம்  பெயர துவங்கி உள்ளன. இதையடுத்து மாவட்ட வன உதவி அலுவலர் கணேஷ்ராம்  உத்தரவின் பேரில் வனசரகர்கள்  சிவக்குமார், சுரேஷ் ஆகியோர் வனத்துறை  ஊழியர்களுடன் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும் பணியை  துவங்கி உள்ளனர்….

The post வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்-வனத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Amravati ,Kolam ,Tiruppur District ,Animalayan Tigers ,
× RELATED மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில்...