×

விஜய்யின் சர்க்கார் பட பாணியில் அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்த வாலிபர்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடந்தது.இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அப்பாராவ் முதலி தெருவை சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரது மகன் இம்தியாஸ் ஷெரீப். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு முதல்முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதை அறிந்ததும், அவர் தனது வாக்கை பதிவு செய்ய நடிகர் விஜய்யின் சர்க்கார் பட பாணியில், விமானம் மூலம் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தார்.காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், இம்தியாஸ் ஷெரீப், தனது வாக்கை பதிவு செய்தார்.மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து வந்து, தனது ஜனநாயக கடமையாற்றிய வாலிபரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்….

The post விஜய்யின் சர்க்கார் பட பாணியில் அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : united states ,Chennai ,Tamil Nadu ,Kanchipuram Municipal ,Vijay ,Sirkar ,
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!