×

லியோவில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி அமைத்த படம் ‘லியோ’. சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அக் 19ல் படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

லோகேஷின் வழக்கமான போதை பொருள் கதைகளத்தில் இந்த படம் உருவாகிறது என கூறப்படுகிறது. அதோடு லோகேஷின் எல்சியு-விலும் இந்த படம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் பாடலாக ‘நா ரெடி’ என்ற பாடலை வெளியிட்டனர். சர்ச்சைகளை கடந்து 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த பாடல் பெற்றது.

சென்னை, காஷ்மீர், ஐதராபாத் உள்ளிட்ட பல ஊர்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் லியோ படத்தில் தனக்கான படப்பிடிப்பு காட்சியை நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய். இதுதொடர்பாக விஜய் உடன் மோதுவது மாதிரியான போட்டோவை பகிர்ந்து, “லியோ படத்தில் விஜய் தனது பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார். இரண்டாவது முறையாக இந்த பயணத்தை சிறப்பாக மாற்றியதற்கு நன்றி அண்ணா” என பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

The post லியோவில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Lokesh Kanakaraj ,Sanjay Dutt ,Arjun ,Thrisha ,Priya Anand ,Gautam Manan ,Mishkin ,Mansur Aligan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு