×

மீண்டும் நடிக்க வந்திருப்பதாக சொல்வது முட்டாள்தனம்: மாதுரி தீட்சித் கோபம்

மும்பை: நெட்பிளிக்ஸில் வெளியாகும் தி ஃபேம் கேம் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார், மாதுரி தீட்சித். இதுகுறித்து அவர் கூறியதாவது:தி ஃபேம் கேம் வெப்தொடரில் நடிகையாகவே நடிக்கிறேன். அதனால்தான் இந்த வேடம் எனக்கு கஷ்டமாக இல்லை. இத்தொடரில் நடித்திருப்பதால், மாதுரி கம் பேக் என்று மீடியாவினர் கூறுகின்றனர். மீண்டும் நடிக்க வந்த மாதுரி என்றெல்லாம் கட்டுரை வெளியிடுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் எங்கும் ஓடிவிடவில்லை, திரும்பவும் வந்திருப்பதற்கு. நான் எனது சினிமா துறையில்தான் இருக்கிறேன். அமெரிக்காவையும் விட்டுவிட்டு, என் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி பல வருடங்களாகிவிட்டது. அவ்வப்போது படங்களிலும் நடிக்கிறேன். நான் மீண்டும் நடிக்க வந்திருப்பதாக சொல்வது முட்டாள்தனம். இனிமேல் இப்படி சொல்லவேண்டாம். இவ்வாறு மாதுரி தீட் சித் கோபத் துடன்  கூறி யுள்ளார்….

The post மீண்டும் நடிக்க வந்திருப்பதாக சொல்வது முட்டாள்தனம்: மாதுரி தீட்சித் கோபம் appeared first on Dinakaran.

Tags : Madhuri Dixit ,MUMBAI ,Netflix ,Madhuri ,
× RELATED உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்!