சென்னை:சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் பிரபல ரவுடியான பிபிஜிடி சங்கர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடி பிபிஜிடி சங்கர் தொழிலதிபர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பணத்தை வைத்து தனது பினாமிகள் பெயரில் காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளாக வாங்கி குவித்து வைத்திருந்தார். இதற்கிடையே தமிழக போலீசார் ரவுடி பிபிஜிடி சங்கர் மீது பதியப்பட்ட வழக்கின்படி, சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் ரவுடி பிபிஜிடி சங்கரின் வீடு, அவரது பினாமிகள் வீடுகள், உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அைத வைத்து பிபிஜிடி சங்கரின் கூட்டாளிகளிடம் நடத்திய விசாரணையில் அவை தொழிலதிபர்களை மிரட்டி வாங்கப்பட்ட சொத்துக்்கள் என்பது உறுதியானது. வாங்கி குவித்துள்ள சொத்துகள் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்று அவர்களால் விளக்க முடியவில்லை. சொத்துகள் பெறுவதற்கான சட்டப்பூர்வ பணம் பரிவர்த்தனைகள் எதையும் பிபிஜிடி சங்கரால் விளக்க முடியவில்லை. அதேநேரம், குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தை வருமானத்தில் வந்த சொத்தாக காட்டி, அந்த சொத்துகளுக்கு பொது அதிகாரம் பத்திரம் மூலம் ரவுடி பிபிஜிடி சங்கர் தனது பெயரில் பதிவு செய்துள்ளார். பிறகு அந்த சொத்துகளை தனது பினாமி பெயர்களுக்கு மாற்றியுள்ளது தெரியவந்தது.இதைதொடர்ந்து ரவுடி பிபிஜிடி சங்கர் தனது பினாமிகள் பெயரில் வாங்கி குவித்த ₹25 கோடி மதிப்புள்ள 79 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். …
The post தொழிலதிபர்களை மிரட்டி பினாமிகள் பெயரில் வாங்கி குவித்த காஞ்சி பிரபல ரவுடி பிபிஜிடி சங்கரின் 25 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.