×

`நாயக்குடு’ ஆகிறது ‘மாமன்னன்’

கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம், ‘மாமன்னன்’. இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், ரவீணா ரவி நடித்திருந்தனர். கடந்த 29ம் தேதி வெளியான இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் கார் பரிசளிக்கப்பட்டது. இப்படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த், தனுஷ், பா.ரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்பட பலர் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ‘மாமன்னன்’ படம் தெலுங்கில் ‘நாயக்குடு’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, வரும் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post `நாயக்குடு’ ஆகிறது ‘மாமன்னன்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kathir ,Dhanush ,Mari Selvaraj ,Udhayanidhi Stalin ,Vadivelu ,Bahad Basil ,Keerthy Suresh ,Lal ,Raveena Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரவக்குறிச்சி ராமர்பாண்டி கொலை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல்