×

நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா நடிக்கும் ‘டெவில்’

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் நந்தமுரி கல்யாண் ராமின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் ‘டெவில்’ படத்தின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோவின் மூர்க்கத்தனத்தைப் பற்றி குறிப்பிடும் வகையில் ‘டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜெண்ட்’ என்ற வாசகம் டைட்டிலுக்கு கீழே இடம்பெற்றுள்ளது. மேலும், ‘டெவில்’ என்ற கொடூரமான மற்றும் புத்திசாலித்தனமான நபர் ஒருவர் அறிமுகம் செய்யப்படுகிறார். ‘சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் டெவில் என்று ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் இருந்தார்’ என்ற குரல் ஒலிக்கிறது. அப்போது நந்தமுரி கல்யாண் ராம் தோன்றி, ஒரு நல்ல ஏஜெண்ட் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுகிறார். அவர் ரகசிய உளவாளி போல் தோன்றுகிறார்.

நவீன் மேதாராம் இயக்கும் இதில் நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ளனர். காந்த் விஸா கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசை அமைத்துள்ளார். பீரியட் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரித்துள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.

The post நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா நடிக்கும் ‘டெவில்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nandamuri Kalyan Ram ,Samyukta ,Hyderabad ,Devil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...