×

3 மணி நேரம் ஓடும் வலிமை

சென்னை: அஜித் குமாரின் வலிமை படத்துக்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா நடித்துள்ள படம், வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம், கடந்த பொங்கலன்று திரைக்கு வர இருந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக படத்தின் ரிலீஸ் உடனே தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 24ம் தேதி வலிமை படம் ரிலீசாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம், 59 நிமிடங்கள், 5 நொடிகள் வரை இப்படம் ஓடுகிறது. அதாவது, 3 மணி நேரம் இப்படம் திரையில் ஓடும்….

The post 3 மணி நேரம் ஓடும் வலிமை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ajit Kumar ,Sensor Board UA ,Huma Kureshi ,Kartikeya ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற...