×

வசூல் சாதனை படைத்த மாமன்னன்: மக்களின் பேராதரவுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி

‘மாமன்னன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாமன்னனை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post வசூல் சாதனை படைத்த மாமன்னன்: மக்களின் பேராதரவுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mamannan ,Udayanidhi Stalin ,Mari Selvaraj ,Udhayanidhi Stalin ,Vadivelu ,Fahad Fazil ,Kollywood Images ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...