×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

* 288 பதவிகளுக்கு 1,067 வேட்பாளர்கள் போட்டி * நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்* அச்சமின்றி வாக்களிக்க 900 போலீசார் பாதுகாப்பு * ரோந்து பணியிலும் தீவிர கண்காணிப்புராணிப்பேட்டை : நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதில், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் உள்ளிட்ட 6 நகராட்சிகள் மற்றும் நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், காவேரிப்பாக்கம், அம்மூர், கலவை, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 288 பதவிகளுக்கு மொத்தம் 1,067 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 411 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 284 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி, வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நாளை (19ம் தேதி) சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் முகப்பில் பந்தல் அமைத்தல், விளக்குகள் பொருத்துதல், பழுதடைந்த சுவிட்ச் பாக்ஸ் சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை நவல்பூர் கங்காதரா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் பந்தல் அமைத்தல், விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகள் நேற்று நடந்தது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வசதிக்கென பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல இரவு நீண்டநேரம் ஆகலாம் என்பதால் வாக்குச்சாவடி மையம் முழுவதும் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. நாளை மதியம் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று விடுவார்கள் என்பதால்  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.961 போலீசார்நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, வாக்காளர்கள் அச்சமின்றியும் சுதந்திரமாக வாக்களிப்பதற்காகவும் மாவட்டம் முழுவதும் 961 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்….

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : praysaram ,ranipette district ,Ranippet district ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி...