×

‘ஜெயிலர்’ படத்தின் பாடல் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலய்யா’ பாடல் நேற்று மாலை வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, வினாயகன், சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி, வைரலானது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.

அனிருத் இசையில், ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல், வரும் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை ‘வா நூ காவாலய்யா’ பாடல் வெளியானது. படத்தில் இப்பாடலுக்கு தமன்னா ஆடிப்பாடி நடிப்பது போல் இடம்பெறுகிறது. ரஜினி ஸ்டைலாக தோன்றும் காட்சிகளும் இடம்பெறுகிறது. இந்த பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

The post ‘ஜெயிலர்’ படத்தின் பாடல் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Rajinikanth ,Sun Pictures ,Mohanlal ,Shivrajkumar ,Jackie Shroff ,Tamannaah ,Ramya Krishnan ,Vasant Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை...