×

இன்னும் 2 மணிநேரத்தில் ‘காவாலா’ கொண்டாட்டம் ஆரம்பம்!

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

அந்தப் பாடலில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் இருக்கலாம் என்று போஸ்டரைப் பார்த்ததும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் தமன்னா பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஓடிடி தளங்களில் வெளியான ‘ஜீகர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ஆகியவற்றில் தமன்னா கவர்ச்சிகரமாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அவற்றின் சில வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து கமென்ட் செய்து வந்தனர் இந்நிலையில் ‘ஜெயிலர்’ படப் பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட டாப் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் கவர்ச்சிப் பாடலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு யூகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் எப்படிப்பட்ட பாடல் என்பது தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் ஏற்ப்பற்போடன் உள்ளனர்.

The post இன்னும் 2 மணிநேரத்தில் ‘காவாலா’ கொண்டாட்டம் ஆரம்பம்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nelson ,Anirudh ,Rajinikanth ,Mohanlal ,Sivarajkumar ,Sunil ,Tamannaah ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...