×

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை, மருத்துவ காப்பீடு!: அல்ஜீரியா அதிபர் அதிரடி அறிவிப்பு

அல்ஜீரியா: அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேலை இல்லா திண்டாட்டமானது உள்ளது. படித்தும் வேலை கிடைக்காமல் இளைஞர்கள் பலர் தவித்து வருகின்றனர். சில சமயத்தில் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் உணவு, வறுமை என இளைஞர்கள் வாழ்க்கை திண்டாடிவருகிறது. இந்நிலையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அல்ஜீரியா அதிபர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். தற்போது, வேலை இல்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல் மத்ஜித் அறிவித்துள்ளார். வேலை இல்லாதவர்களும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி வேலை இல்லாத இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்றும் அல்ஜீரியா அதிபர் அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பால் அந்நாட்டு இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர். …

The post வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை, மருத்துவ காப்பீடு!: அல்ஜீரியா அதிபர் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Algeria ,
× RELATED நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மொராக்கோவில் 300 பேர் பரிதாப பலி