×

‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு மொழியில் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிப்பு!

‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு மொழி வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் வெற்றிை தொடர்ந்து தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’ என்ற பெயரில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு மொழியில் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிப்பு! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mari Selvaraj ,Udhayanidhi Stalin ,Vadivelu ,Fahad Fazil ,Udhayanidhi Stalin's… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...